மெல்போர்ன்: செர்பியாவின் ஜோகோவிக் மற்றும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், அர்ஜெண்டினாவின் டியாகோவை சந்தித்த ஜோகோவிக், அவரை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஜோகோவிக் உலகின் நம்பர் 2 இடத்திலும், அர்ஜெண்டினாவின் டியாகோ, உலகின் 14வது இடத்திலும் உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில், சுவிஸ் நாட்டின் பெடரர், ஹங்கேரியின் மார்டனை வீழ்த்தி, காலிறுதிப் போட்டியில் நுழைந்தார். இது அவரின் 57வது கிராண்ட்ஸ்லாம் காலிறுதிப் போட்டியாகும்.

காலிறுதிப் போட்டியில், ஜோகோவிக்குடன் மோதவுள்ளவர் கனடாவின் மிலோஸ் ரவோனி.
‍பெண்கள் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் கிவிட்டோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.