ஜோதிகா நடிப்பில் உருவாகும் ‘ராட்சசி…!

புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் ‘ராட்சசி’ . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா. இதற்காக சுமார் 50 லட்ச ரூபாய் செலவில் பள்ளி மாதிரி அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கும் காலகட்டத்தில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

ராட்சசி’ பணிகள் முடிந்துவிட்டதால், தற்போது ‘குலேபகாவலி’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா.