ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஜோதிகா  நடித்து வரும் காற்றின் மொழி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

சுதந்திர தினமான நேற்று இந்த போஸ்டர் வெளியிடப்பட்டது.  இதில் ஜோதிகா 10 கட்டளைகளுடன் நிற்பது போன்று வெளியாகி உள்ளது.

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துவரும் படம்  “காற்றின் மொழி”. இந்த படத்தின் படபிடிப்பு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. வரும அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகை வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்  “தும்ஹாரி சுலு”. இந்த படத்தின் கதை தமிழில் ரிமேக் செய்யப்பட்டுள்ளது.  இந்த படத்தில் வித்யாபாலனின் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில்  ரேடியோ ஜாக்கியாக வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது.  படத்தை, ஏற்கனவே மொழி படத்தை இயக்கிய ராதாமோகனே இயக்குகிறார்.

இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக  வித்தார்த் நடித்து வருவதாக கூறப்படு கிறது.  இவர்களை தவிர இந்த படத்தில் லட்சுமி மஞ்சு, மனோபாலா, குமரவேல், உமா பத்மநாபன், மோகன்ராம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சுதந்திர தினமான நேற்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் பெண்களுக்கான பத்து கட்டளைகள் என்று ஜோதிகா இரண்டு கைகளிலும் கட்டளைகளை தாங்கி நிற்பது போன்று உள்ளது.