நடிகை ஜோதிலட்சுமி உடல் இன்று மாலை தகனம்

சென்னை:

றைந்த முதுபெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் உடல் இன்று மாலை சென்னை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

jyothi-lakshmi-18045

 

முதுபெரும் கவர்ச்சி நடிகையான ஜோதிலட்சுமி, ரத்த புற்றுநோய் காரணமாக மறைந்தார்.  தற்போது அவரது உடல், சென்னை  தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று பிற்பகல் மூன்று மணிக்கு,  ஜோதிலட்சுமியின் உடல் ஊர்வலமாக கண்ணமாபேட்டை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, நான்கு மணி சுமாருக்கு தகனம் செய்யப்பட இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.