குப்பையில் வீசப்பட்ட நாக்பூர் பச்சிளங்குழந்தையை தத்தெடுப்பதை கைவிட்ட பத்திரிகையாளர் தம்பதி

நாக்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் குப்பையில் வீசப்பட்ட அழகான பச்சிள்ம் பெண் குழந்தை  மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த குழந்தையை பத்திரிகையாளர் தம்பதி ஒருவர் தத்தெடுக்க விரும்புவதாக தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தங்களது சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருந்தனர்.

ராஜஸ்தானின் நாக்பூரில் பிறந்த குழந்தை ஒன்று, பெற்றோர்ல் கைவிடப்பட்ட நிலையில் குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

இதுகுறித்து டிவிட்டரில் குழந்தையின் வீடியோ பதிவிட்ட பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வினோத் கப்ரி, சாக்ஷி ஜோஷி  தம்பதி, அந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவ தாக தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சட்டரீதியாக அணுகி விரைவில் அந்த குழந்தையை தத்தெடுப்போம் என்று கூறியிருந்தனர்.

அவர்களின் தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் வரவற்பை பெற்றது. பத்திரிகை யாளர் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

கப்ரி தம்பதியினர்மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையத்துக்கும் அனுமதி கோரி விண்ணப்பித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், அந்த குழந்தைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி இருந்தார்.

பத்திரிகையாளர் தம்பதியினிரின் செயல் சமூக ஊடக தளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. மேலும், குழந்தை விரைவாக குணமடையயும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பலர் பத்திரிகையாளர் தம்பதியினரின் செயல் மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உயிர் பெற்றதாகவும் வாழ்த்தியிருந்தனர்.

இந்த நிலையில், குழந்தை தத்தெடுக்கும் முயற்சியை கைவிடப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.