உ.பி.யில் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!!

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அடையாளம் தெரியாத நபர்களால் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கான்பூரின் பில்காரில் பைக்கில் சென்ற மர்ம நபர்கள் பத்திரிக்கையாளர் நவீன் குப்தா மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நவீன் குப்தா இந்துஸ்தான் இந்தி பத்திரிக்கையில் ஒன்றியல் பணியாற்றி வந்தார்.

உலக பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்பட்ட போது ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகைகள் எந்த அளவுக்கு சுதந்திரமாக உள்ளன என்பது தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டது. 180 நாடுகள் பெயர் அடங்கிய பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்தது 136-வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.