உச்சநீதிமன்றத்துக்குள்  மொபைல் எடுத்துச் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி

டில்லி

ச்சநீதிமன்றத்தில் மொபைல்  போன் எடுத்துச் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்துக்குள் மொபைல் எடுத்துச் செல்ல ஆறு மாதங்களுக்கு குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களுக்கு தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.  அதை ஒட்டி இன்று நீதிமன்ற  பதிவாளர்  அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள சுற்றறிக்கையில், “கடந்த 22.06.2018 தேதி இட்ட கடிதத்தின்படி குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலர்களுக்கு ஆறு மாதங்களுக்கு நீதிமன்ற அறைகளுக்குள் மொபைல் எடுத்துச் செல்ல  இந்திய தலைமை  நீதிபதி அனுமதி வழங்க பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதை ஒட்டி தற்போது அனைத்துப் பத்திரிகையாளர்களும் உச்சநீதிமன்றத்தினுள் மொபைல் எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்படுகிறது.    அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் சைலண்ட் மோடில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.