பத்திரிகையாளர்கள் மெண்ட்டல்கள்!: சின்மயி வெடித்த தீபாவளி பட்டாசு

’பத்திரிகையாளர்கள் மெண்ட்டல்கள் (மனநோயாளிகள்) என்று தீபாவளி பட்டாசாய் வெடித்திருக்கிறார் திரைப்பாடகி சின்மயி.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “செய்தியாளர் சந்திப்புகளில் என்னைத்தொடர்ந்து அவர்கள் அவமானப்படுத்துவருகிறார்கள். மனநலக் காப்பகங்களில் இருக்கவேண்டிய அவர்களுக்கு பதில் சொல்லியே நான் நொந்துபோய்விடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைகளின் ஊற்றான சின்மய, பா.ஜ.க. மகளிரணியினருடன் எடுத்துக்கொண்ட படங்களை, சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதுதான் அவரதை மிகவும்

இதற்கு சின்மயி, ”அந்தப் புகைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன் மகளிர் தின நாளில் எடுக்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசச் சென்றிருந்தேன். நானேதான் அந்தப் படங்களை ட்வீட் செய்திருந்தேன். ஊடக நண்பர்களே! இதை மீடியா க்ரூப்களில் ஷேர் செய்கிறீர்களே பொதுப் புத்தி இருக்கிறதா? இவற்றையெல்லாம் செய்ய யார் உங்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள்?

இந்தப் படத்தைப் பகிரும் அனைவரையுமே கேட்கிறேன். உங்களுக்கு மூளை இருக்கிறதா? இல்லை ஞாபக மறதிக்கு ஆளாகிவிட்டீர்களா?” என்று ஆத்திரத்துடன் கேட்டிருக்கிறார் சின்மயி.

மேலும், “ஆதார் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இது குறித்து  பலமுறை விமர்சனம் செய்திருக்கிறேன்.  அரசியல், ஆன்மிகம் எனப் பலதுறையிலும் ஆண்கள் மீது புகார்கள் இருக்கின்றன. ஆனால், பெண்கள் மீதே குறை கூறி தவறு செய்தவர்களைக் காப்பாற்ற எத்தனை கூட்டுக் களவாணித் தனங்கள் செய்கிறீர்கள்?

நான் எனக்கு நடந்ததை கூறி என்னைப்போல பாதிக்கப்பட்ட பலருக்கும் தூண்டுகோலாக இருக்கிறேன்.  ஆனால், பத்திரிகையாளர் சந்திப்புகளில் என்னைப் பலரும் கடிந்துகொண்டு அவமானப்படுத்தினார்கள். மனநலக் காப்பகங்களில் இருக்க வேண்டிய சதிகாரர்களின் மனங்களில் உதித்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்லும் கட்டாயத்துக்கு ஆளானேன்” என்று பதிவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம்தான் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு போட்டுவிட்டது.. சின்மயி வெடிக்கும் ட்விட்டர் வெடிகளையாவது ரசிப்போம்!