செய்தியாளர்கள் கொலை – தண்டனை: மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா!

டில்லி:

செய்தியாளர்கள் சமூக விரோதிகளால் கொல்லப்படுவது இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், கொலை யாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளிலும், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்று உள்ளது.

இது இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் பாதுகாப்பு குழு  பட்டியல் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், செய்தியாளர்களை கொலை செய்யும் கொலையாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றும் அவர்களை தண்டிப்பது சம்பந்தமான நடவடிக்கைகளில் இந்தியா மோசமான நிலையிலேயே இருந்து வருவதாக தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் பிரபல செய்தியாளர்கள் கவுரி லங்கேஷ் உள்பட ஏராமான செய்தியாளர்கள் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில், கொலையாளிகள் மீது இதுவரை கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வில்லை. இந்த விவகாரம் ஐ.நா. சபை வரை எதிரொலித்தது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் கொலை சம்பவத்தில் தண்டனை வழங்கப்படும் மோசமான நாடுகளில்  பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில், இதுவரை செய்தியாளர்கள் கொல்லப்பட்ட வழக்குகளில்,13 வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.

இந்த பட்டியலில் சோமாலியா முதலிடத்திலும், சிரியா 2வது இடத்தையும், ஈராக் 3வது இடத்திலும் உள்ளது.

4வது இடம் தெற்கு சூடான், 5 வது இடம் பிலிப்பைன்ஸ், 6 வது இடம் ஆப்கானிஸ்தான், 7 வது இடம் மெக்சிகோ,8-வது இடம் கொலம்பியா, தொடர்ந்து பாகிஸ்தான்,பிரேசில் ரஷ்யா, வங்காளதேசம், நைஜிரீயா, இந்தியா உள்ளன.

இந்த பட்டியல் காரணமாக இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Journalists killed - Sentence: India in the worst countries list!, செய்தியாளர்கள் கொலை - தண்டனை: மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா!
-=-