ஊடகவியலாளர்கள் புதிய அமைப்பு: அடக்குமுறையை தடுக்க முதல்வரை சந்திக்கத் திட்டம்

மிழக ஊடகவியலாளர்கள் இணைந்து, “ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

நேற்று  மாலை சென்னை ஸ்டர்லிங் சாலையில் உள்ள காயிதே மில்லத் பன்னாட்டு மீடியா ஸ்டடீஸ் அகடமி அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து ராம் தலைமை வகித்தார்.

இதில்  புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் எஸ். கார்த்திகை செல்வன்,  தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியர் அருண்ராம்,   நியூஸ் 7-னின் நிர்வாக ஆசிரியர் தில்லை  இந்து குழு வெளியீட்டாளர் என். ராம், தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் தமிழ்நாட்டில் செய்தி ஊடகங்களுக்கு எதிரான தன்னிச்சையான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்றும் இது குறித்து தமிழக முதல்வரை சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.