சொந்த கட்டிடத்திற்கு மாறும் மாவட்ட பாஜக அலுவலகங்கள்: அடிக்கல் நாட்ட ஜே.பி நட்டா வருவதாக தகவல்

பல்வேறு மாவட்ட பாஜக அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காகவும் பாஜகவின் தேசிய செயல் தலைவரான ஜே.பி நட்டா சென்னை வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு தமிழகத்தில் உள்ள 15 முக்கிய மாவட்டங்களில், கட்சி அலுவலகத்திற்காக சொந்தமாக கட்டிடம் கட்டுவது என சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இப்பணிக்காக பல மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக வரும் 12ம் தேதி அக்கட்சியின் தேசிய செயல் தலைவரான ஜே.பி நட்டா,சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து அவர் தலைமையில் விவாதிக்கப்பட இருப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு தேவையான பணிகள் குறித்தும் பேசப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி