நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி உறுதி
டில்லி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க பல கட்சிகள் முயன்று வருகின்றன. அந்த முயற்சிக்கு பல கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளன. எனவே பாஜகவும் கூட்டணி அமைக்க தயாராகி வருகிறது.
அவ்வகையில் இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் சந்தித்து கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் முடிவில் பீகாரில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்க உள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்த கூஉட்டணியில் ஏற்கனவே ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் உபேந்திர குஷ்வாகா ஆகியோரும் உள்ளனர். அனைவரையும் கலந்தாலோசித்து யார் யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.