முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு முதல் நபராக, மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அதில், மனுவை அனுப்பியி ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன், கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார்.

தலைமறைவாக இருந்தபடியே, தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பலமுறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை செய்தார். அவரது மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இந்த நிலையில் அவரது பதவிக்காலமும் முடிந்தது. அடுத்த சில நாட்களில் அவர் கைது செய்யப்பட்டார்.  கோவை மலுமிச்சம்பட்டியில் பதுங்கி இருந்த அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ராம்நாத் கோவிந்த்துக்கு தனது வழக்கறிஞர் மூலம் முன்னாள் நீதிபதி கர்ணன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “இந்திய ன் பீனல் கோட் 72 வது சட்டப்பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு சிறப்பு அதிகாரம் உண்டு. அதாவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கவோ தள்ளுபடி செய்யவோ முடியும். தங்களு்ககு உள்ள அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்றம் எனக்கு விதித்திருக்கும் ஆறுமாத சிறைத்தண்டனையை ரத்துசெய்யக்கோருகிறேன்” என்று கர்ணன் தெரிவித்துள்ளார்

புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் வந்திருக்கும் முதல் கோரிக்கை மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.