சேகர் ரெட்டி வழக்கில் நீதிபதி திடீர் விலகல்!!

சென்னை:

சேகர் ரெட்டி வழக்கில் இருந்து விலகுவதாகவும், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு பரிந்துரைக்கும் படி நீதிபதி ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

சட்ட விரோதமாக ரூ.34 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பதுக்கியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு சேகர் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. இந்த வழக்கை நீதிபதி ரமேஷ் விசாரணை நடத்தி வந்தார். தன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில் மட்டுமே அமலாக்கத்துறை தன் மீது வழக்குபதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தன் பெயரில் பட்டியலிடப்பட்ட இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு ரமேஷ் பரிந்துரைத்துள்ளார்.