தூத்துக்குடி

ன்லைன் வழக்கு விசாரணை இடையில் ஆபாசமாக பேசிய ஒரு வழக்கறிஞருக்குத் தூத்துக்குடி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.   அவ்வகையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய வழக்கு ஒன்று ஆன்லைன் மூலம் நடந்துக் கொண்டு இருந்தது. இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் இணையத் தொடர்பு இல்லாததால் சாலை ஓரம் நின்று வாதம் செய்துக் கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு கார் மிகுந்த சத்தத்துடன் சென்றுள்ளது.  இதனால் கோபம் அடைந்த வழக்கறிஞர் அந்த கார் ஓட்டுநரை ஆபாசமான வார்த்தையால் திட்டி உள்ளார்.   இது ஆன்லைனில் இருந்த அனைவருக்கும் கேட்டுள்ளது.   இந்த வார்த்தையைக் கேட்ட நீதிபதி, மற்றும் வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஆபாச வார்த்தை கூறிய வழக்கறிஞருக்கு நீதிபதி உடனடியாக ரூ. 100 அபராதம் விதித்துள்ளார்.  அத்துடன் தாமே முன்வந்து வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.   இருப்பினும் கோபம் அடங்காத நீதிபதி இந்த வழக்கறிஞர் மீது தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு புகார் அளித்துள்ளார்.