நீதிபதி ஜோசப்பை உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும்: செல்லமேஸ்வர்

டில்லி:

ச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஜோசப்பை நியமனம் செய்ய வேண்டும் என்று நேற்று  ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் மீண்டும்  கூறி உள்ளார்.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு தீபக் மிஸ்ராவுக்கு  எதிராகவும், மத்திய அரசுக்கும் எதிராக வும்  பரபரப்பாக குற்றச்சாட்டு கூறி  குரல் உயர்த்திய உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர்

ஏற்கனவே நீதிபதி ஜோசப் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தி ருந்த ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

நேற்று பதவியில் இருந்து ஓய்வுபெற்றதும், தனது அரசு இல்லத்தை காலி செய்த செல்லமேஸ்வர், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசபை  உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க வேண்டும் என்று தாம்  விரும்புவதாக செய்தியாளளிடம் தெரிவித்தார்.

மேலும்,  கொலிஜியம் அவரது பதவி உயர்வுக்கு பரிந்துரைத்த நிலையில், அதை மத்திய அரசு தடுத்து வருகிறது.  அவருடைய பதவி உயர்வை தடை செய்வதில் தமக்கு எந்த பங்கும்  கிடையாது என்றார்.

கடந்த  ஜனவரி 12ம் தேதி 3 நீதிபதிகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக புகார் அளித்தது குறித்து தமக்கு வருத்தம் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்து உள்ளார்.