தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு!

டில்லி,

னக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செயக்கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக,  முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி பலமுறை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டும், அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில்,  அரசியல் சாசனப்படி தம்மை சிறையில் அடைத்தது சட்டப்படி தவறு என்றும், எனவே, உச்சநீதிமன்றம் தமக்கு விதித்துள்ள ஆறு மாத சிறைத்தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.