நீதிபதி கர்ணன் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்! சுப்ரீம் கோர்ட்டு பிடிவாதம்

டில்லி,

ய்வு பெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது. அவர் சிறை தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்து உள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முழுமையான தீர்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி தண்டனையை ரத்து செய்ய கர்ணன் சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், உச்சநீதி மன்றம், கர்ணன் 6 மாத சிறை தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஏற்கனவே தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து மறு ஆய்வு செய்யக்கோரியும், ஜாமினில் விடுவிக்க கோரியும் பல தடவை கோரிக்கை விடுத்தும், நீதிபதி கர்ணனின் மனுவை விசா ரணைக்கு ஏற்க உச்சநீதி மன்றம் மீண்டும் மீண்டும் மறுத்து வருகிறது.

உச்ச நீதி மன்ற தீர்ப்பு காரணமாக கோவையில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன், தற்போது உடல் நலமில்லாமல் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்றும் அவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்றத்தின் இந்த பிடிவாதம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.