உச்சநீதி மன்ற நீதிபதி குரியன் ஜோசப் இன்று பணி ஓய்வு!

டில்லி:

ச்சநீதி மன்ற நீதிபதி குரியன் ஜோசப் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில்  நிகழ்ச்சியில் பேசிய அவர், பணி ஓய்வுக்கு பிறகு எந்த அரசு பதவியையும் ஏற்க போவதில்லை என்று தெரிவித்து உள்ளார்.

நீதிபதி குரியன் ஜோசப்

உத்ரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப்பை உச்சநீதி மன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசு அதை ஏற்க மறுத்தது. இரண்டு முறை அவரது பதவி உயர்வு மறுக்கப்பட்ட நிலையில், 3வது முறையாக அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி குரியன் ஜோசப் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். கடிதத்தில், இந்திய வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் இதுவரையில் நடைபெறாத ஒன்று. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு உச்ச நீதிமன்றம் சரியான எதிர்வினையாற்றாவிட்டால், காலம் ஒருபோதும் நம்மை மன்னிக்காது என்றும்,  தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை கருவிலேயே இறந்து விடும்’ குறிப்பிட்டிருந்தார்.

அவரது கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில்,  உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் இன்று பணி ஓய்வு பெற்றார்.

நேர்மையாக இருப்பவர் எவர் முன்பும் மண்டியிடுவதில்லை என்பது நீதியரசர் குரியன் ஜோப் ஒரு எடுத்துக்காட்டு.