டிரம்பின் அகதிகள் தடை உத்தரவு ரத்து: அமெரிக்க கோர்ட்டு அதிரடி

வாஷிங்டன்,

மெரிக்காவுக்குள்  நுழைய 11 நாட்டு மக்களுக்கு  விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். வெளிநாட்டி னருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்து.

அதன் ஒருபகுதியாக,  எகிப்து,  ஈரான், ஈராக், லிபியா, மாலி, சோமாலியா, வடகொரியா, சூடான், சிரியா, ஏமன், தெற்கு சூடான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.

அப்போது அந்த தடை உத்தரவு 4 மாதங்கள் அமலில் இருக்கும் என அறிவித்திருந்தார். கடந்த அக்டோபருடன் 4 மாதங்கள் முடிவடைந்தும், தடை நீக்கப்படாமலேயே இருந்து வந்தது.

இதை எதிர்த்து,  அமெரிக்காவின்  சிட்டி கோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை   நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் விசாரித்து வந்தார்.

விசாரணையின்போது, அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி,‘அரசின் இத்தகைய முடிவு ஒருதலைபட்சமானது’  என்று  11 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.