நிர்மலா தேவியை மதுரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

விருதுநகர்:

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் தொடர்ந்து விரசாரணை நடத்தினர். விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் முன்பு நிர்மலாவை போலீசார் ஆஜர்படுத்தினர். நிர்மலா தேவியை 12 நாட்கள் மதுரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.