கூடுதல் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்திக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம்!

சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு  கூடுதல் நீதிபதியாக அறிவிக்கப்பட்ட செந்தில்குமார் ராம மூர்த்தி இன்று  பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தகில் ரமணி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி பணியிடங்கள் எண்ணிக்கை 75. ஆனால் 59 பணியிடங்களுக்கு மட்டுமே நீதிபதிகள் உள்ளனர். 16 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று அவருக்கு தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து  தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.