சென்னை

கொறடாவின் உத்தரவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உள்பட 11 உறுப்பினர்கள்  வாக்களித்த வழக்கில்  இன்று சென்னை உயரநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் அதிமுகவின் முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் எற்பட்ட பிணக்கின் காரணமாக அதிமுக இரண்டாக உடைந்தது.   அடுத்து முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்று நம்பிக்கை தீர்மானத்தை சட்டப் பேரவையில் கொண்டு வந்தார்.

அப்போது அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி ஓ பி எஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.     அதை ஒட்டி திமுக கொறடா சக்ரபாணி உள்ளிட்டோர் அதிமுக கட்சியின் உத்தரவை மீறிய ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு அளிக்கப்பட உள்ளது.