டில்லி:
குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து உயர்நீதிபதிகள் கொண்ட மாநாடு ஆலோசனை நடத்த உள்ளனர்.
வரும் 2017ம் ஆண்டு ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியலில் குற்றவாளிகளின் பின்னணி, தேர்தல் சட்டங்கள், தேர்தல் கமிஷனின் அதிகார எல்லை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து  ஐகோர்ட் நீதிபதிகள் கொண்ட மாநாடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் மேற்கண்ட விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

gavel
gavel

ஐகோர்ட் நீதிபதிகளுக்கான வருடாந்திர மாநாட்டை ம.பி., மாநிலம், போபாலில் உள்ள, தேசிய நீதித் துறை அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.
இரண்டு நாள் நடக்கும் இந்த மாநாட்டில், தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகார வரம்பு தொடர்பான பிரச்னைகள் குறித்தும்  விவாதிக்கப்பட உள்ளன.
மேலும்,  தேர்தலின் போது, ஆளுங்கட்சி, அரசு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்து வாடிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு, நீதித் துறை அளிக்கும் தீர்வு குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை முற்றிலும் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும், இதற்கு கடுமையான சட்டவிதிகள் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.