Random image

திருத்தணி கோவிலில் திடீர் ஆய்வு செய்த நீதிபதிகள்

திருத்தணி

சென்னையை அடுத்த திருத்தணி முருகன் கோவிலில் நீதிபதிகள் திடீரென ஆய்வு செய்து கோவில் சம்பந்தமான விவரங்களை சேகரித்தனர்.

சமீபத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும் அனைத்ஹ்டு ஆலயங்களிலும் மாவட்ட நீதிபதிபதிகள் நீதிபதிகள் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.   அந்த ஆய்வின் போது கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு எற்பாடுக்ள், சுகாதார வசதிகள், பணியாளர் விவரங்கள், கோவிலின் சொத்துக்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.  நேற்று திடீரென திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன், திருத்தணி துணை நீதிமன்ற நீதிபதி கபீர் ஆகியோர் திருத்தணி முருகன் கோவிலில் ஆய்வு நடத்தினார்கள்.    அந்த ஆய்வின் போது கோவில் அன்னதானக் கூடம், கழிவறை போன்ற இடங்களி நேரில் பார்வை இட்டனர்.

அத்துடன் பக்தர்களிடமும் குறைகள் குறித்து நீதிபதிகள் கேட்டனர்.   ஊழியர்களின் வருகை பதிவேடு, காலி பணி இடங்கள், சொத்துக்கள் போன்ற விவரங்களை நீதிபதிகள் சேகரித்துள்ளனர்.   இந்த சோதனையின் போது திருத்தணி கோவில் பராமரிப்பில் 103 ஏக்கர் நஞ்சை நிலம், 99 ஏக்கர் புஞ்சை நிலம்,  சென்னையில் 25 குடியிருப்புக்கள், திருத்தணியில் 4 வீட்டு மனைகள் மற்றும் திருத்தணியில் 144 கடைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.