சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன? நீதிபதிகள் நேரில் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன ? என்று  நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தந்தை, மகனுக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களின் இரங்கலை #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு காவல்துறையே காரணம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா மற்றும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாத்தான்குளம்  காவல்நிலையத்தில் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.