சென்னை: ஓபிஎஸ் மகனும், அதிமுக எம்பியுமான ரவிந்திரநாத் தேனி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது வரும் 16ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவிந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றதால், தேர்தலை தள்ளி வைக்கவில்லை என்று கூறியிருந்தார். இந் நிலையில், தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
எனவே அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என ரவிந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தீர்ப்பை, அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.