நீதித்துறையில் புரட்சி தேவை: நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும் ஜனநாயகத்தின் தூண்கள்: உச்சநீதி மன்ற நீதிபதி
டில்லி:
நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும் தான் ஜனநாயகத்தைக் காக்கும் தூண்கள், நீதித்துறை யில் புரட்சி தேவை என்று உச்சநீதி மன்ற நீதிபதி கோகய் தெரிவித்துள் ளார்.
ஏற்கனவே கடந்த ஜனவரி 12ம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கோகய், செல்லமேஸ்வரர், எம்.பி.லோகூர், மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்து புகார் தெரிவித்த நிலையில், தற்போது நீதிபதி கோகய், நீதித்துறை யில் புரட்சி தேவை என்று பேசியிருப்பை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவி காலம் வரும் அக் டோபர் 2ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற உள்ள நீதிபதி ரஞ்சன் கோகய் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில் ராம்நாத் கோயங்கோ மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உச்சநீதி மன்ற நீதிபதி ரஞ்சன் கோகெய் பேசியபோது, சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தேவை, சீர் திருத்தம் தேவையில்லை என்றும், மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்குவது நீதித்துறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருப்பதற்கு பெருமை படுவதாக அவர் கூறிய நீதிபதி, கலகக் குரல் எழுப்பும் நீதிபதிகளாலும், சுதந்திரமான பத்திரிகையாளர்களாலும் தான் ஜனநாயகம் காக்கப்படுகிறது என்று தெரி வித்தார்.
நீதித்துறை சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்ற மிகப்பெரிய அமைப்பு என்றும் அரசியல் அமைப்புசட்டங்களை முன்னி்ன்று பாதுகாக்கும் காவலன் தான் நீதித்துறை.
ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முதல் ஆளாக வந்து நிற்பவர்கள், சுதந்திரமான பத்திரிகையாளர்களும், நீதிக்காக ஓங்கி குரல் கொடுக்கும் நீதிபதிகளும் தான் என சொல்கிறார்கள் அதை நான் ஓப்புக்கொள்கிறேன்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறை விதைத்த நம்பிக்கையின் பலனைத்தான் இப்போது இந்தியா அறுவடை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.