அமிதாப், ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்றுக்கு ஆயுர்வேத சிகிச்சை.. நடிகை சிபாரிசால் பரபரப்பு..

டிகர் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன். ஐஸ்வர்யாராய், அவரது மகள் ஆராத்யா கொரோனா தொற்றால் பதிக்கப்பட் டுள்ளனர். இதற்காக அமிதாப், அபிஷேக் இருவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யாராய் ஆராத்யா இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின் றனர். அவர்கள் குணம் அடைய பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது பிரார்த்தனையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை டிவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா டிவிட்டர் மெசேஜ் வெளியிட்டார். அதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன். அபிஷேக், ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராத்யா விரைந்து குணம் அடைய வேண்டுகிறேன். ஆயுர்வேத வைத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள் இயற்கையின் கருணையால் விரைவில் குணம் அடையலாம்’என தெரிவித்திருக்கிறார்.
அமிதாப் குடும்பத்தினர் ஆங்கில மருத்துவம் எடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு ஜூஹி சிபாரிசு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed