கதறி அழும் “பிக்பாஸ்” ஜூலி!: என்ன ஆச்சு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி திடீரென வயிறு வலி என அழுவது போன்ற புரமோ தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு வருகிறது. இது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி படுகேவலமாக போயிக்கொண்டிருப்பதாக பெரும்பாலோனோர் கூறி வரும் நிலையில்,  டிஆர்பிக்காக  தினம்தோறும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஜூலி போடும் நாடகத்திற்கு அளவே இல்லை. அவரது நடிப்பது மக்களுக்கு நன்கு புரிந்து விட்டது என்பது சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாரா வாரம் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வரும் ஜூலி, தற்போதைய எபிசோடில்,  டைனிங் டேபிள் அருகே அமர்ந்து திடீரென வயிற்றை பிடித்து கதறுவது போன்ற காட்சி வெளியாகி  உள்ளது.

வலியால் துடிக்கும் ஜூலியை, பாசமுள்ள அண்ணன்  சினேகன். அனைவரும் அலேக்காக தூக்கிக்கொண்டு,  பதறியடித்து ஓடுவதாகவும் காண்பிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய எபிசோடு வரை ஜூலியை தங்கை தங்கை எனக்கூறி டிபன் ஊட்டி விட்டு, ஓவியாவுக்கு எதிராக தூண்டி விட்ட காயத்ரி, ஜூலி அழுவதை பார்த்து சும்மா டிராமா பண்ணுது கன்றாவி என்கிறார்.

ஜூலிக்கு என்ன ஆனது… பொறுத்திருந்து பார்க்கலாம்… காயத்ரி சொன்னது போலவே ஜூலியின் செயல் நாடகமா இல்லையா என்பது  இன்று தெரியவரும்.

பிக்பாஸில் எல்லாமே நடிப்பாக உள்ளதால் ஜூலி அழுவதுக்கூட நடிப்புதான் என்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.