வைரலாகும் ஜூலியின் புதிய போட்டோஷூட் வீடியோ…..!

மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார் ஜூலி.

அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நுழைந்தார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழு நேர நடிகையாகவும் மாறி விட்டார் ஜூலி.

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் பயோபிக் படம், அம்மன் தாயி படம் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடிகை ஜூலி நடித்துள்ளார்.

சமீபத்தில் உடல் முழுவதும் கருப்பு நிற மை பூசிக் கொண்டு படு பயங்கரமான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் ஜூலி. சமூக வலைத்தளங்களில் இந்த போட்டோக்கள் வைரலானது.

இந்நிலையில், ஜூலியின் புதிய போட்டோஷூட் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது . உடல் முழுக்க வண்ணம் பூசி இந்த சவாலான போட்டோஷூட்டை செய்துள்ளார். மேலும் எந்திரன் படத்தில் வரும் சூப்பர்ஸ்டார் பாணியில் கையில் ரோஸ் வைத்தபடி போஸ் தந்துள்ளார் ஜூலி.