டந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (ஜூலை20) நிலவில் முதன்முதலாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய  அப்போலோ-2 விண்கலம் மனிதர்களுடன் சென்று  இறங்கியது.

நிலவுக்கு மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்வதில் தீவிரம் காட்டி வந்த அமெரிக்கா, அதற்கான முயற்சியில் இறங்கியது. பல கட்ட சோதனைகளுக்குப் பின்னர், 1969-ம் ஆண்டு, ஜூலை மாதம் 16 – ம்  தேதி, அப்பல்லோ 11 என்ற விண்வௌி ஓடத்தை 3 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்கா ஏவியது.

சுமார் 4 நாள்கள் பயணம் செய்த அப்பல்லோ 2 விண்வௌி ஓடம், அதே ஆண்டு ஜூலை 20ம் தேதி சந்திரனில் இறங்கியது. இந்த விண்கலத்தில், கட்டளை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், கட்டளை விமானியாக மைக்கேல் காலின்சும், மற்றுமோர்  அதிகாரியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றிருந்தனர்.

விண்வெளி ஓடம் நிலவில் இறங்கியதும், மைக்கேல் காலின்ஸ் விண்வெளி ஓடத்திலேயே தங்கிக்கொள்ள, ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் ‘ஈகிள்’ எனும் சிறிய ரக ஓடத்தின் வாயிலாக  சந்திரனில் ஜூலை 20 அன்று இறங்கினர்.

ஆனால், அவர்களால் உடடியாக நிலவில் கால் வைக்காத முடியாத நிலையில், சுமார்  6 மணி நேர தாமதத்துக்குப் பிறகு ஜூலை 21-ம் நாள் நிலவில் இறங்கி உலகையே வியக்க வைத்தனர்.

இந்த நிகழ்வின்போது, ஆல்ட்ரின் நிலவில் கால்வைக்க சற்றே தயங்க, முந்திக்கொண்ட ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து, நிலவில் இறங்கிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

மனிதன் நிலவில் கால் வைத்த வரலாற்று மகத்துவம் நிறைந்த நாள் இன்று.