24ந்தேதி: மத்திய அரசை கண்டித்து ஆந்திராவில் ‘பந்த்’

அமராவதி:

ந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்து வரும் மத்திய அரசை கண்டித்து வரும் 24ந்தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு நடைபெறும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடி அரசை எதிர்த்து, கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் பாஜ கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, மத்திய பாஜ அரசுமீது பாராளு மனறத்தில் நம்பிக்கை யில்லா தீர்மானமும் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தின்மீதான விவாதம் நேற்று காரசாரமாக நடைபெற்ற நிலையில், வாக்கெடுப்பில் மோடி அரசு தப்பித்துக்கொண்டது.

இந்த நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வரும் 24ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைத்துக்கட்சிகளும், பேல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளும் தெலுங்குதேசம் கட்சி அதிகாரப்பூர்வமாக இன்றும் தெரிவிக்க வில்லை என்றாலும், தெலுங்கு தேசமும் ஆதரவு அளிக்கும் என நம்பப்படுகிறது.

இதன் காரணமாக 24ந்தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.