ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தினம் இன்று….

ஜூலை 29: தமிழக விவசாயிகளுக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தூக்கி எறிந்த தினம் இன்று….

காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தும், செவிமடுக்காத நரசிம்மராவ் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து,  தனது மத்திய அமைச்சர் பதவியை துச்சமென மதித்து 1991 ஆண்டு ஜூலை 29  அன்று ராஜினாமா செய்தார் வாழப்பாடியார்.

தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்திக்கு  மத்திய அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் பிரதமர் நரசிம்மராவ். அமைச்சரவையில், வாழப்பாடியாருக்கு  பிடித்தமான தொழிலாளர் நலத் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போதும், தமிழகம் கர்நாடகம் இடையே காவிரிப்பிரச்சினை விசுவரூபமாக எழுந்திருந்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும்   கர்நாடக அரசுக்கும்  இடையில், காவேரி நீர் பங்கீடு  பிரச்சனையில், முக்கியத் திருப்பம் வந்தது. உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, நடுநிலை வகிக்காமல், கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.

இரு மாநிலங்களுக்கு இடையேயான பொதுவான காவிரி பிரச்சினையில்  மத்திய அரசும் நடுநிலை வகிக்காமல், கர்நாடகாவுக்கு ஆதரவாக  ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் கொத்தித்தெழுந்தனர்.

அப்போதைய மத்திய தொழிலாளர் துறை அமைச்சராக  இருந்த வாழப்பாடியார், மத்திய அரசின் செயல்மீது அதிருப்தி கொண்டு, காவிரி விவகாரத்தில் மத்தியஅரசு நடந்துகொண்ட விதம், தமிழ்நாட்டுக்கு  எதிரான – நீதிக்குப் புறம்பான  செயல் என்று,  நரசிம்மராவுக்கு பகிரங்கமாக கடிதம் எழுதினார்.

ஆனால், பிரதமரிடம் இருந்து எந்தவித பதிலும் வராத நிலையில், தனது தொழிலாளர் நலத் துறை  அமைச்சர் பதவியை  எந்தவித ஆரவாரம் இன்றி  ராஜினாமா செய்துவிட்டு, டில்லியிலிருந்து தமிழகத்துக்கு பறந்து  வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி !

அப்போது, 1991-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டது. இதனால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தமிழக மக்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

தமிழகத்துக்காகவும், தமிழக விவசாயிகளுக்காகவும் வீறுகொண்டு எழுந்து, தனது மத்திய அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து, மக்கள் மத்தியில் என்றும் உயர்ந்து நிற்கிறார் வாழப்பாடியார்!

1991  ஜூலை 29…    29 ஆண்டுகள்  உருண்டோடிவிட்டது !

காவிரி உள்ளவரை வாழப்பாடியாரும் புகழும் நிலைத்து நிற்கும்… 

தமிழக வரலாற்றில் வாழப்பாடியார் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி