டில்லி

ந்த வருடம் ஜூலை மாதம் 5 ஆம் தேதி அன்று இடைப்பட்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

வானியல் நிபுணர்களுக்கு இந்த வருடம் ஒரு சிறப்பான வருடம் ஆகும்.   இந்த வருடம் ஏற்கனவே ஒரு வருடாந்திர சந்திர கிரகணம் மற்றும் இரு இடைப்பட்ட சந்திர கிரகணங்கள் நிகழ்ந்துள்ளன.   வரும் ஜூலை மாதம் 5 ஆம் தேதி இந்த வருடத்தின் நான்காம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.  இது ஒரு இடைப்பட்ட கிரகணம் ஆகும்.

இடைப்பட்ட சந்திர கிரகணம் என்பது பூமியின் மங்கலான நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுவதாகும்.   இதனால் இந்த கிரகணம் உலகின் பல பகுதிகளில் தெரியாது.   இந்த சந்திர கிரகணம் வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள், மேற்கு ஆப்பிரிக்காவில் பல பகுதிகள் ஆகிய இடங்களில் மட்டுமே தெரியும்.

வழக்கமாக வருடச் சந்திர கிரகணம் என்பது சூரிய கிரகணத்தைப்  போல் சந்திரனும் மறையத்  தொடங்கி முழுவதுமாக மறைந்து பிறகு மீண்டும் சிறிது சிறிதாகத் தெரிவதாகும்.   ஆனால் இடைப்பட்ட கிரகணம் என்பதில் இது போல வளர்ச்சி இருக்காது.   சில நேரம் சந்திரன் மறைந்து பிறகு வெளிப்படும்.

இந்த சந்திர கிரகணம் நிகழும் நேரமானது இந்தியாவில் பகல பொழுதாகும். எனவே இதை இந்தியாவில் உள்ள வானிலை நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் இதை ஒரு கிரகணமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.  இந்த கிரகணம் சுமார் 2 மணி நேரம், 43 நிமிடங்கள் மற்றும் 24 நொடிகள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.