1985-ம் ஆண்டு கனடாவிலிருந்து  டெல்லி நோக்கி வந்த கனிஷ்கா விமானம் தீவிரவாதிகள் வைத்திருந்த குண்டு வெடித்ததில் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த பயணிகள், விமான ஊழியர்கள் 329 பேரும் கொல்லப்பட்டனர். இந்த சோகம நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 35 ஆண்டுகள் ஆகிறது.

கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரிலிருந்து கடந்த 1985-ம் ஆண்டு ஜுன் 23-ம் தேதியன்று லண்டன் வழியாக டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம், அட்லாண்டிக் கடலின் மேல் ஐரிஸ் கடற்கரை அருகே சென்றபோது திடீரென வெடித்து சிதறியது. இந்த விமானத்தில் 24 இந்தியர்கள், 268 கனடியர்கள் மற்றும்  27 பிரிட்டிஷ்காரர்கள்,, விமானச்சிப்பந்திகள் என மொத்தம்  329 பேர் பயணித்தனர். இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்தனர்.

இது தொடர்பான விசரணையில், சீக்கிய தீவிரவாதிகளால்  விமானம் குண்டு வைத்துத் தகர்ப்பட்டது தெரியவந்தது. சீக்கியர்களின் புனித கோவிலான பொற்கோவிலுக்குள் ராணுவத்தினர் புகுந்ததற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

1984-ம் ஆண்டு பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்த விமானத் தாக்குதலை நடத்தியதாக தெரியவந்தது.

இது தொடர்பான விசாரணை  கனடா தலைநகர் டொராண்டோவில் நடந்துவந்தது. இதில்  ரிபுதாமன் சிங் மாலிக், அஜெய்ப் சிங் பக்ரி மற்றும் இந்தர்ஜித் சிங் ரெயாத் என மூவர் மீது அங்கு விசாரணை நடைபெற்றது. இதில் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக, இந்தர்ஜித் சிங் ரெயாத்  9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவரும் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், 1985 ம் ஆண்டு 329 பேர் பலியாவதற்கு காரணமான கனிஷ்கா குண்டுவெடிப்பு சம்பவத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார். அங்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்று  விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார்.

ஆனால், இந்த விவகாரத்தில், இந்திய அரசின் நடவடிக்கைகள் இன்றும் கேள்விக்குறியதாகவே உள்ளது.  இந்தியாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமனாம் தகர்க்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆன நிலையில், இது தொடர்பான எந்தவொரு  விசாரணையையும்  இந்தியா மேற்கொள்ளாதது  விந்தையாகவே இருந்து வந்துள்ளது.

Indian Prime Minister Manmohan Singh bows beside his wife Gursharan Kaur (L) after laying a wreath at the Air India memorial in Toronto June 28, 2010. Air India Flight 182 left Toronto on June 23, 1985 and exploded in the sky off the Irish coast, killing all 329 people aboard. REUTERS/ Mike Cassese (CANADA – Tags: DISASTER POLITICS)

விமானத்தை  குண்டு வைத்து, வெடிக்கச் செய்து கொலை செய்த குற்றவாளி குறைந்தபட்ச தண்டனை மட்டுமே பெற்று விட்டு, சிறையில் இருந்து வெளியாகி விட்டார்.

இந்த விசாரணையை  நாம் தலைமையேற்று நடத்தி, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரவேண்டிய நிலையில், அதை ஏன் கனடா நாட்டின் விசாரணைக்கு விட்டுவிட்டோம் என்பது இதுவரை அவிழ்க்கப்படாத முடிச்சாகவே உள்ளது.

329 பேரை கொலை செய்த ஒரு குற்றவாளியை நமது நாட்டு சட்டப்படி தண்டிக்க,  நமது மத்திய அரசு இதுவரை  எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ள முடியவில்லை, நீதியை நிலைநாட்ட முடியவில்லை என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது.

நம் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு நம்முடைய சொந்த சட்டங்களின் கீழ், நாம் ஏன் செயலாற்ற முடியவில்லை, நம் சொந்த நாட்டில் நீதியை ஏன் உறுதிப்படுத்த முடியவில்லை என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது..