சென்னை:

ஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு  தெரிவித்து உள்ளது.

பிளஸ்2 படித்தவர்கள் பொறியியல் மேற்படிப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடியில் படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.  அதன்படி, ஐஐடி ஐதராபாத் கல்லூரி அறிவித்துள்ள நுழைவுத்தேர்வானது நாடுமுழுவதும் வரும் 24ந்தேதி நடைபெற உள்ளது.

‘இந்த தேர்வு தமிழகத்திலும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. ஆனால், சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் நுழைவுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் , நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை காட்டினால் மாணவர்களை இ-பாஸ் இன்றி அனுமதிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.