சென்னை:

மிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதக் கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 24ந்தேதி  தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில், சட்டமன்றத்தை எத்தனை நாட்கள்  நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதமே தாக்கப்பட்டு விட்ட நிலையில் சில நாட்கள் மட்டுமே பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு சட்டமன்றம் முடித்து வைக்கப்பட்டது. அதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது

இந்த நிலையில்,  மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி, துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற வேண்டியதிருப்பதால்,  தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது.

இந்த நிலையில் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்ய அலுவல் ஆய்வுக் குழு வரும் 24ஆம் தேதி கூடுகிறது.

எந்தெந்த தேதிகளில் எந்த துறைகளின் மானிய கோரிக்கை குறித்து விவாதிப்பது என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

24ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக சட்டபேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அவை முன்னவர், எதிர்கட்சி தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.