ஜூனியர் கிரிக்கெட்: உலக கோப்பையை கைப்பற்றியது இந்தியா

மவுன்மாங்கானு:

நியூசிலாந்தில் நடந்த 12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. 217 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

வெற்றி இலக்கை இந்திய அணி, 38.5 ஓவர்களில் எட்டியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில், இந்திய அணி, பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைச் சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இறுதிப் போட்டியில் இந்திய அணி, மேற்கிந்திய தீவு அணியிடம் தோற்றது. ஜூனியர் உலகக்கோப்பையை 4-வது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.