ஜூனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சம் பரிசு

--

டில்லி:

உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. உலகக்கோப்பையை 4-வது முறையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஜூனியர் அணியின் வெற்றிக்கு அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் காரணம். இதை தொடர்ந்து ராகுல் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ. 30 லட்சமும், ஊழியர்களுக்கு ரூ. 20 லட்சமும் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.