கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இருவரும் அறிவுரை….!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்களும், தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் திரையரங்குகள், கல்விக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து கூட்டாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ பதிவு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

You may have missed