ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கித் தொடர் – இந்தியாவிற்கு மீண்டும் வாய்ப்பு!

மும்பை: 2021ம் ஆண்டிற்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கித் தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பானது, ஆண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பைத் தொடரை நடத்தி வருகிறது. இவற்றில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும்.

ஐரோப்பாவிற்கு 6, ஆசியாவிற்கு 4, ஆப்ரிக்காவுக்கு 2, ஓசியனாவுக்கு 2 மற்றும் பான்அமெரிக்கா பிராந்தியத்திற்கு 2 என்று கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக, கடந்த 2016ம் ஆண்டு இந்த ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கித் தொடர் லக்னோவில் நடத்தப்பட்டது. அதற்கடுத்து 5 ஆண்டுகள் கழித்து தொடரை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தொடர் நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில், இந்திய அணி இத்தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.