‘ஜுராசிக் வேர்ல்டு-பாலென் கிங்டம்’ ஆங்கில படத்தின் பிரமிக்க வைக்கும் டிரைலர் வெளியீடு

லகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்ப்பட்டு வரும்,  ஜுராசிக் வேர்ல்டு-பாலென் கிங்டம்  படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்கத்தக்க வகையிலும், பிரமாண்டமாகவும் டிரைலர் வெளியாகி உள்ளது.

 

ஹாலிவுட் இயக்குனர் ஜே ஏ பயோனா இயக்கியுள்ள இந்த படம்,  ஏற்கனவே வெளிவந்த ஜுராசிக் பார்க்- படத்தின் அடுத்த பாகமாக தயாரிக்கப்பட்டு வெளியாகிறது.

ஜுராசிங் பார்க்  திரைப்படங்களின் வரிசையில் இடம்பெறும் 5-வது திரைப்படம் இந்த ஜுராசிக் வேல்ர்டு  – பாலென் கிங்டம்.

இந்த படத்தில் ஏற்கனவே ஜுராசிக் பார்க் படத்தில் நடித்த கிரிஸ் ப்ராத், ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், பி.டி.வாங் இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் ஜேம்ஸ் க்ரோன்வெல், டெட் லெவின், ஜஸ்டிஸ் ஸ்மித், ஜெரால்டின் சாப்ளின், டானெல்லா பிளினா, டோபி ஜோன்ஸ், ரஃபே ஸ்பால் மற்றும் இசபெல்லா செர்மன் ஆகியோறும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

உலக மக்களின் எதிர்பார்ப்பினை பெற்றுள்ள இந்த படம்  ஜூன் 22 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.