கொரோனா வைரஸ் பீதியில் பொதுமக்கள் முக கவசங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நிலையில், தலைக்கவசம் அணியாமல் நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் பேர் பலியாகி வரும் நிலையில், தலைக்கவசம் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்ட மறுக்கிறார்களே என்று காவல்துறையைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஆதங்கம் தெரிவித்து உள்ளார்.

சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது.  தற்போது  80 நாடுகளில் பரவி உள்ளது.  இதன் காரணமாக பல நாடுகளில்,  பொதுமக்கள் முன்னேற்பாடாக தேவையான உணவுப்பொருட்கள், மருந்து மாத்திரிகைள், முகக்கவசம் வாங்கி பதுக்கி வருகின்றனர். இதனால் முகக்கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால், பல இடங்களில் மக்கள் இப்போதே முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் வாங்கி வருகின்றனர். மேலும் பல மருத்துவமனைமகள், பள்ளிகளிலும் முகக்கவசம் அணி வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், தேவையான மருந்து, மாத்திரைகளை தேவையான அளவுக்கு இருப்பு வைக்கும்படி அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்துள்ளனர். அதுபோல இந்தியா விலும் முன்னெச்சரிக்கையாக தற்போதே  முகக்கவசம் மீது மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது…  முகக்கவசம் தேடி பொது மக்கள் மருந்து கடைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்… இதன் காரணமாக திருப்பதி உள்பட பல பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் முகக்கவசம் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பங்க்ஜ் நெய்ன் ஐபிஎஸ் (Pankaj Nain IPS), இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு என்று தகவல்கள் மட்டுமே வந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு முகமூடி பைத்தியம் பிடித்திருக்கிறது..

அதேவேளையில், நாள் ஒன்றுக்கு சாலை விபத்துக்களில்  400 பேர் இறக்கின்றனர்,  இதற்கு தேவையான ஹெல்மெட் மீது மக்களுக்கு இன்னும் வெறி வரவில்லையே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

2007ம் ஆண்டு அரியானா கேடர் அதிகாரியான பஙக்ஜ் நெய்ன், ஐபிஎஸ் உடன் பொறியியல் மற்றும்எம்பிஏ, எல்எல்பி படித்த பட்டதாரி ஆவ்ர. தற்போது அரியானா சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் சூப்பரிடென்ட்டாக பணியாற்றி வருகிறார்.