ஐபிஎல் 2020 – இன்னும் 2 லீக் ஆட்டங்களே பாக்கி!

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 2 லீக் ஆட்டங்களே பாக்கியுள்ளன.

இன்று நடைபெறும் சென்னை – பஞ்சாப் மற்றும் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் முடிந்துவிட்டால், அடுத்ததாக 2 ஆட்டங்களே பாக்கி.

நவம்பர் 2ம் தேதி திங்கட்கிழமை டெல்லி – பெங்களூரு ஆட்டமும், நவம்பர் 3ம் தேதி ஐதராபாத் – மும்பை ஆட்டமும் நடைபெறும். லீக் போட்டிகள் அந்த நாளுடன் நிறைவடையும்.

அதன்பிறகு, நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரை பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும். இதற்கடுத்து, நவம்பர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.