ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா போட்டியிடுகிறார்.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் தேர்தலில் ஓட்டளிக்க வருவோரை தடுத்தனர். இதனால் பிரச்னை ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.

அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். . காலை முதலே ஓட்டுச்சாவடிகளுக்கு அருகில் வன்முறை வெடித்ததால் ஓட்டுப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது.

மதியம் 2 மணி நேரத்தில் 1 சதவீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது. 2 மணி நிலவரப்படி சற்று அதிகரித்து 5.52 சதவீத வாக்குகள் பதிவானது. இறுதியில் வெறும் 6.5 சதவீதமே ஓட்டுப்பதிவாகி இருந்தது. ஜம்மு-காஷ்மீர் தேர்தல் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் இதுதான் மிகக்குறைந்த ஓட்டுப்பதிவாகும் மாலை 6 மணி நிலவரப்படி வெறும் 6.5 சதவீத வாக்குகளே பதிவாகியது.