யெஸ் வங்கி கட்டுப்பாட்டுக்கு சில மணி முன்பு ரூ.265 கோடி எடுத்த குஜராத் நிறுவனம்

டோதரா

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு சில மணி நேரம் முன்பு யெஸ் வங்கியில் இருந்து ரூ.265 கோடியை ஒரு குஜராத் நிறுவனம் தனது கண்க்கில் இருந்து எடுத்துள்ளது

குஜராத் மாநிலம் வடோதரா நகரில் ஸ்மார்ட் சிடி அமைக்கும் பணிகளை வடோதரா மாநகராட்சி செய்து வருகிறது.  இதில் ஸ்பெஷல் பர்பஸ் வெகிகிள் என்னும் குஜராத் அரசு நிறுவனம் ஒப்பந்த தாரராக உள்ளது.   இந்த நிறுவனம் தனது பரிவர்த்தனைகளை யெஸ் வங்கி மூலம் செய்து வந்தது.

இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிடி அமைக்கும் பணிக்கான நிதி உதவியாக ரூ.265 கோடியை அனுப்பி இருந்தது.  அந்த தொகை யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது.   கடந்த புதன்கிழமை அன்று இந்நிறுவனம் திடீரென அந்த தொகையைக் கணக்கில் இருந்து எடுத்துள்ளது.

வியாழக்கிழமை அன்று யெஸ் வங்கியை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட  ரிசர்வ் வங்கி ரூ.50000க்கு மேல் எந்த ஒரு கணக்கில் இருந்தும் பணம் எடுக்கக் கூடாது என கட்டுப்ப்பாடு விதித்தது.  இந்த கட்டுப்பாட்டுக்கு சில மணி நேரம் முன்பாக ரூ.265 கோடி ரூபாயை குஜராத் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.