சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே

மும்பை:

த்தியில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு  தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில், ஒருதடவை இயந்திர வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு, வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடத்துங்கள் என்று, பாரதியஜனதா தலைமைக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களில் (evm) முறைகேடு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஏற்கனவே ஆம்ஆத்மி கட்சி அதுகுறித்து செயல்முறை விளக்கமும் அளித்துள்ளது. ஆனால், மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றன.

ஆனால், பாரதியஜனதா கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருவது  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. எந்த பட்டனை அழுத்தினாலும், வாக்குகள் பாரதியஜனதாவுக்கே விழுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் கர்நாடக தேர்தலில், காங்கிரசே ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் பாரதியஜனதா ஆட்சியை பிடிக்கும் தருவாயில் உள்ளது. இது எதிர்க்கட்சிகளிடையே மீண்டும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் பாரதியஜனதாவின் கூட்டணி கட்சியான  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாரதியஜனதாவுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

ஒரு தடவை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தி தேர்தலை நடத்துங்கள்…  பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரேயின் சவால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.