கையில் வெறும் ரூ. 38,750 மட்டுமே உள்ளதாம்: வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி தகவல்!

வாரணாசி:

த்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது,  வேட்புமனுவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று தாக்கல் செய்தார்.

அவர் வேட்புமனு உடன் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில், தன்னிடம் ரூ.38,750 மட்டுமே இருப்பதாக  தெரிவித்து உள்ளார்.

முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி  வாரணாசியில் உள்ள காகாலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார்.  முற்பகல் சுமார் 11.30 மணியளவில் வாரணாசி கலெக்டர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்,  தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொந்து விவரம் குறித்த அபிடவிட்டில், தனது   கையில் ரூ. 38,750 மட்டுமே ரொக்கப்பணம் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், தன்னிடம், சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை என்று தெரிவித்துள்ளவர்,  தன்க்கு ரூ. 1.41 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ. 1.10 கோடி மதிப்பிலான அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி