வுரங்காபாத்

காராஷ்டிராவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் மோடியின் சுதந்திர தின உரை அரசியல் அமைப்பு விதிகளை மீறுவதாக கூறி  வழக்கு பதிந்துள்ளார்.

பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் சுமார் 55 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.   அந்த உரை அரசியல் அமைப்பு விதிகளை மீறுவதாக கூறி அவுரங்காபாத் பெண் வழக்கறிஞர் ரமா விட்டல்ராவ் காலே என்பவர் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

இது குறித்து அவுரங்காபாத் காவல் அதிகாரிக்கும், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் க்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளார்.

அதில் காணப்படுவதாவது :

“பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பல முறை நமது நாட்டை இந்துஸ்தான் எனவே குறிப்பிட்டுள்ளார்.   ஒரு முறை கூட இந்தியா என்றோ பாரத் என்றோ கூறவில்லை.  125 கோடி இந்தியர்களும், பல வெளிநாட்டினரும் நேரிலும், தொலைக்காட்சி மூலமாகவும் காணும் ஒரு நிகழ்ச்சியில் இது போல சொல்வது மரியாதைக்குறைவான செயலாகும்.

இந்திய அரசியல் அமைப்பு விதிகளின் படி நமது நாட்டை இந்தியா என்றோ பாரத் என்றோ மட்டுமே குறிப்பிட வேண்டும்.   அப்படி இருக்க இந்துஸ்தான் என்பது மதச் சார்பான குறியீடு ஆகும்.   இது பல தேச பக்தர்களின் உணர்வை புண்படுத்தும் ஒரு செயலாகும்.   பிரதமர் என்னும் முறையில் தேசத்தின் அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து அதன் படி செயல்படாத மோடிக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

இது குறித்து முதல்வர் ஃபட்னாவிஸ் பொது நல வழக்கு ஒன்றையும் மோடி மேல் பதிய வேண்டும்.   மேலும் அவுரங்காபாத் போலீஸ் கமிஷனர் அவர்களை நான் நேரில் சந்தித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்த உள்ளேன். ”  என ரமா குறிப்பிட்டுள்ளார்.